போ போ போ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜாவேத் அலிடி. இமான்மனம் கொத்திப் பறவை

Po Po Po Song Lyrics in Tamil


ஆண் : போ போ போ நீ எங்க வேணா போ…
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ…

—BGM—

ஆண் : எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ…
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ…

ஆண் : போ போ போ நீ எங்க வேணா போ…
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ…

ஆண் : நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே…
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே…
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே…
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுடியே…

ஆண் : போ போ போ நீ எங்க வேணா போ…
போ போ போ நீ ஒண்ணும் வேணா போ…

—BGM—

ஆண் : தங்கமே என்னிடம் என்ன குற‌ கூறு…
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு…

—BGM—

ஆண் : ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம்…
மாறிடாமலே நடுவயதில் நுாலாய் கூடினோம்…
ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம்…
நம்மை வேறாக பாா்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே…

ஆண் : போ போ போ நீ கூடு விட்டுப் போ…
போ போ போ நீ கூறும் கெட்டுப் போ…

—BGM—

ஆண் : ம்ம்… கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்…
சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம்…

ஆண் : காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்…
கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன்…
உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி…
என்னை ஏற்காமல் போனாலே போடி உன் விதி… உன் விதி…

—BGM—

ஆண் : எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ…
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ…

ஆண் : போ போ போ நீ தாலி கட்டிப் போ…
போ போ போ நா வாழாவெட்டி போ…

ஆண் : நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே…
என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே…
பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே…
சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுடியே…

ஆண் : போ போ போ…


Notes : Po Po Po Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. போ போ போ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading