பிச்சை பாத்திரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமது பாலகிருஷ்ணன்இளையராஜாநான் கடவுள்

Pitchai Paathiram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

{ ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு…
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே… } * (2)

—BGM—

ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா…

—BGM—

ஆண் : அம்மையும் அப்பனும் தந்ததா…
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா…

ஆண் : இம்மையை நான் அறியாததா…
இம்மையை நான் அறியாததா…
சிறு பொம்மையின் நிலையினில்…
உண்மையை உணர்ந்திட…

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

—BGM—

ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…

—BGM—

ஆண் : அத்தனை செல்வமும் உன் இடத்தில்…
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்…
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்…

ஆண் : ஒரு முறையா இரு முறையா…
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்…
புது வினையா பழ வினையா…
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்…

ஆண் : பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற…
வாழ்கையும் துரத்துதே…
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம்…
இன்று பிதற்றுதே…

ஆண் : அருள் விழியால் நோக்குவாய்…
மலர் பத்தால் தாங்குவாய்…
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற…

ஆண் : பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…

ஆண் : பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு…
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…


Notes : Pitchai Paathiram Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Ilaiyaraaja. பிச்சை பாத்திரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading