ஒரு காற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாநான் கடவுள்

Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

—BGM—

ஆண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை…
உன‌க்கும் இருந்த‌து உண்டு…
யார்க்கும் போலொரு தேகம் தாகம்…
உனக்கும் வளர்ந்தது இங்கு…

ஆண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்…
உலகமோ இருளில்…
ஒளியை போலே ஓர் துணை…
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

—BGM—

ஆண் : வீதி என்றொரு வீடும் உண்டு…
உனக்கது சொந்தம் என்று…
வானம் என்றொரு கூரை உண்டு…
விழிகளும் அறியாது…

ஆண் : வேலியில்லா சோலைக்காக‌ வந்ததோா் காவல்…
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்…
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…

ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…

ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…


Notes : Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. ஒரு காற்றில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading