பிள்ளை நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாநீங்கள் கேட்டவை

Pillai Nila Irandum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…

பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…
பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மலைமேலே மழை அடிக்க…
குழு : மலைமேலே மழை அடிக்க…
பெண் : மான் தோப்பில் குடை பிடிக்க…
குழு : மான் தோப்பில் குடை பிடிக்க…

பெண் : ஆவாரம்…
குழு : காட்டுக்குள்ள…
பெண் : ஆயிரம் பூ…
குழு : பூத்திருக்க…
பெண் : மங்காத்தா…
குழு : காத்திருந்தா…
பெண் : மாமனோடு…
குழு : பூ பறிக்க…

BGM

பெண் : எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்…
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்…

BGM

பெண் : தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்…
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்…

பெண் : தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை…
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை…

பெண் : கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு…
அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்…

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…

பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…

BGM

பெண் : ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்…
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்…

BGM

பெண் : சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளந்தால்…
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்…

பெண் : உங்களால்தானே உயிர் சுமந்தேனே…
உங்களால்தானே உயிர் சுமந்தேனே…

பெண் : கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வச்சு…
நானே பாசம்தானே…

பெண் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
குழு : லலலா…

பெண் : அலை போலவே விளையாடுமே…
சுகம் நூறாகுமே…
மண் மேலே துள்ளும் மான் போலே…

BGM


Notes : Pillai Nila Irandum Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vairamuthu. பிள்ளை நிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading