பெண் கிளியே பெண் கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன்தேவாசந்தித்த வேலை

Pen Kiliye Pen Kiliye Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…

ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…

பெண் : வாய் மொழி எல்லாமே…
வாய்மை சொல்லாது…
உள்மனம் பேசாமல்…
உண்மைத் தோன்றாது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாய்மொழி எல்லாமே…
வாய்மை சொல்லாது…
பெண் கிளி பொய் சொன்னால்…
ஆண் கிளி தூங்காது…

பெண் : ஆண் கிளியே ஆண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
பாட்டு வரி புரிந்து கொண்டால்…
உன் பல்லவியை நீ மாற்று…

BGM

ஆண் : பெண் கண்களே…
நாடகம் ஆடுமா…
பெண் நெஞ்சமே…
ஊடகம் ஆகுமா…

பெண் : யார் சொல்லியும்…
பெண் மனம் கேட்குமா…
கைத் தட்டினால்…
மொட்டுக்கள் பூக்குமா…

ஆண் : விடை கேட்டேன்…
கேள்வி தந்தாய்…
இது புதிரான புதிர் அல்லவா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கேள்விக்குள்ளே பதில் தேடு…
அது சுவையான சுவை அல்லவா…

ஆண் : உள்ளத்தின் வண்ணம்…
என்னத் தெரியவில்லை…
உடைத்துச் சொல்லும்…
வரைப் புரிவதில்லை…

பெண் : மூடாத பூவுக்குள்…
என்றும் தேன் இல்லை…

ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…

BGM

ஆண் : என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்…
உன் காதிலே கேட்கவே இல்லையா…

பெண் : நீ ஆழிப் போல்…
அலைகளை ஏவினாய்…
நான் கரையைப் போல்…
மௌனமாய் மேவினேன்…

ஆண் : நெஞ்சில் பாசம்…
கண்ணில் வேஷம்…
இது பெண் பூசும் அறிதாரமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உண்மைக் காண வன்மை இல்லை…
உங்கள் விழி என்மேல்…
பழி போடுமா…

ஆண் : நிலவைப் பிரிவதற்கு…
வலிமை உண்டு…
உன் நெஞ்சைப் புரிவதற்கு…
வலிமை இல்லை…

பெண் : கானல் நீர் தேடாதே…
அங்கே நீர் இல்லை…

பெண் : ஆண் கிளியே ஆண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
பாட்டு வரி புரிந்து கொண்டால்…
உன் பல்லவியை நீ மாற்று…

ஆண் : பெண் கிளியே பெண் கிளியே…
பாடுகிறேன் ஒரு பாட்டு…
என் பாட்டு வரி பிடித்திருந்தால்…
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு…

BGM


Notes : Pen Kiliye Pen Kiliye Song Lyrics in Tamil. This Song from Sandhitha Velai (2000). Song Lyrics penned by Vairamuthu. பெண் கிளியே பெண் கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading