பழமுதிர்ச் சோலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாவருஷம் 16

Pazhamuthir Cholai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்…

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

—BGM—

ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே…
தூரல்கள் போடுங்கள் பூமியிலே…
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட…

ஆண் : ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே…
இறகுகள் எனக்கில்லை தாருங்களே…
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட…

ஆண் : பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்…
பனி மலை மேல் நாம் மிதந்திட வேண்டும்…
ஏதோ ஒரு போதைமனம் கொண்டாடுதே…

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

—BGM—

ஆண் : பந்தங்கள் யாவும் தொடர்க்கதை போல்…
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்…

—BGM—

ஆண் : நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்…
பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்…

—BGM—

ஆண் : தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி…
சிந்தை இனித்திட உறவுகள் மேவி…
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே…
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே…

ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை…

—BGM—

ஆண் : வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…

—BGM—

ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை…
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை…

ஆண் : இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க…
இடை விடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட…

ஆண் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…

ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
நான்தான் அதன் ராகம் தாளமும்…
கேட்டேன் தினம் காலை மாலையும்…
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்…

ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்…
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்…


Notes : Pazhamuthir Cholai Song Lyrics in Tamil. This Song from Varusham 16 (1989). Song Lyrics penned by Vaali. பழமுதிர்ச் சோலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading