பூமிக்கு வெளிச்சமெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகாயத்ரி, விஜய் ஆண்டனி & ராகுல் நம்பியார்விஜய் ஆண்டனிடிஷ்யூம்

Boomiku Velichamellam Song Lyrics in Tamil

பெண் : நான் சொல்வதெல்லாம் உண்மை…
உண்மை தவிர வேர் எதுவும் இல்லை…

—BGM—

பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

{ குழு : லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லிங்கு லிங்கு… } * (2)

ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

—BGM—

ஆண் : நீ விழியால் விழியை பறித்தாய்…
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்…
உன் அழகால் எனை நீ அடித்தாய்…
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்…

பெண் : நீ இதமாய் இதயம் கடித்தாய்…
குழு : கடித்தாய்…
பெண் : என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்…
குழு : குளித்தாய்…

பெண் : நீ மதுவாய் எனையே குடித்தாய்…
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்…

ஆண் : காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளு சிறகே…
வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை…

பெண் : ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்…
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரமில்லை…

ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…

—BGM—

ஆண் : நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்…
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்…
ஹேய்… நீ துளியாய் எனக்குள் விழுந்தால்…
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்…

பெண் : நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்…
குழு : சிரித்தால்…
பெண் : என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்…
குழு : தவளும்…

பெண் : நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்…
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்…

ஆண் : கண்களில் மின்மினி…
புன்னகை சிம்பொனி…
மின்னலின் தங்கை நீ புரிகிறதே…

பெண் : தொட்டவுடன் உருகும்…
ஒட்டிக்கொண்டு பழகும்…
புத்தம் புது மிருகமே தெரிகிறதே…

பெண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

குழு : லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லே லிங்கு லே…
லிங்குலேக்கு லிங்குலேக்கு லிங்கு லிங்கு லிங்கு…

Notes : Boomiku Velichamellam Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Vairamuthu. பூமிக்கு வெளிச்சமெல்லாம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading