பட்டு கன்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Pattu Kannam Song Lyrics in Tamil

BGM

ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

பெண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோஹோய்…

பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள்…
உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள்…

பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும்…
எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில்…

ஆண் : நாணம் யாவும் நூலாடை…
நானே உந்தன் புது மேலாடை…

பெண் : மங்கை இவள் அங்கங்களில்…
உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே… ஹோய் ஹோய்…

ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

பெண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோஹோய்…

பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

BGM

பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அடடா…
இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா…

ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே…
உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே…

பெண் : ஆசை தீயை தூண்டாதே…
போதை பூவை தினம் தூவாதே…

ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா…
அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே… ஹோய் ஹோய்…

பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோ ஹோய்…

பெண் : பட்டு கன்னம்…
ஆண் : தொட்டு கொள்ள…
பெண் : ஒட்டி கொள்ளும்…

ஆண் : ஒட்டி கொண்டு…
பெண் : கட்டி கொள்ள…
ஆண் : உள்ளம் துள்ளும்…

Notes : Pattu Kannam Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Muthulingam. பட்டு கன்னம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading