மொட்டு மொட்டு மலராத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்சுவர்ணலதாதேவாகாதல் கோட்டை

Mottu Mottu Malaradha Song Lyrics in Tamil


BGM

பெண் : மொட்டு மொட்டு மலராத மொட்டு…
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு…
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு…
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு…

பெண் : ஆணழகா உன் அடிமை இங்கே…
நீ தேன் அள்ளி தூவிட வா…
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்…
நீ தினம் தினம் கூடிட வா…

பெண் : மொட்டு மொட்டு மலராத மொட்டு…
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு… ஓஹோய்…

BGM

பெண் : தமிழ் தரும் சுவை என…
உன் வாய் மொழி கேட்டேன்…
அது தரும் சுகம் என…
விழி பார்வையை பார்த்தேன்…

பெண் : உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்…
உன்னால் பெண்ணை பண்பாட வேண்டும்…
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்…
என்றும் நீயே நான் ஆக வேண்டும்…

பெண் : உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்…
உன்னால் பெண்ணை பண்பாட வேண்டும்…
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்…
என்றும் நீயே நான் ஆக வேண்டும்…

பெண் : இலக்கியம் எனதுடலே வா நீ வா…
இலக்கணம் உனதுருவே தா நீ தா தேவா…

BGM

பெண் : ஆணழகா உன் அடிமை இங்கே…
நீ தேன் அள்ளி தூவிட வா…
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்…
நீ தினம் தினம் கூடிட வா…

BGM

பெண் : எனை தொடு வரம் கொடு…
உயிர் வாழ்ந்திட கேட்டேன்…
மலர் உடல் மணம் பெற…
தினம் தேவனை பார்த்தேன்…

பெண் : பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்…
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்…
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்…
நித்தம் நித்தம் பித்தான சித்தம்…

பெண் : பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்…
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்…
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்…
நித்தம் நித்தம் பித்தான சித்தம்…

பெண் : இளமையின் ரகசியமே வா நீ வா…
இது தினம் அவசியமே தா நீ தா தேவா…

BGM

பெண் : ஆணழகா உன் அடிமை இங்கே…
நீ தேன் அள்ளி தூவிட வா…
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்…
நீ தினம் தினம் கூடிட வா…

பெண் : மொட்டு மொட்டு மலராத மொட்டு…
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு…
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு…
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு…

BGM


Notes : Mottu Mottu Malaradha Song Lyrics in Tamil. This Song from Kadhal Kottai (1996). Song Lyrics penned by Agathiyan. மொட்டு மொட்டு மலராத பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top