மலரென்ற முகமின்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரி & எம்.எஸ்.ராஜுஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Malarendra Mugamondru Song Lyrics in Tamil


BGM

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆடிடும் சின்ன உடல்…
பாடிடும் வண்ண இதழ்…
ஆடிடும் சின்ன உடல்…
பாடிடும் வண்ண இதழ்…

பெண் : அஞ்சிடும் வஞ்சி இடை…
கெஞ்சிடும் பிஞ்சு நடை…
அஞ்சிடும் வஞ்சி இடை…
கெஞ்சிடும் பிஞ்சு நடை…

பெண் : அல்லி தண்டு வெள்ளி தண்டை…
முத்து செண்டு கன்னங்கள்…
மின்னல் என்று மின்னகண்டு…
துள்ளி செல்லும் எண்ணங்கள்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…

BGM

பெண் : பொன்மகள் காதல் அன்னம்…
பூமகள் கண்கள் மின்னும்…
பொன்மகள் காதல் அன்னம்…
பூமகள் கண்கள் மின்னும்…

பெண் : நெஞ்சமே துள்ளும் வண்ணம்…
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்…
நெஞ்சமே துள்ளும் வண்ணம்…
கொஞ்சுவாள் தங்கக்கிண்ணம்…

பெண் : எள்ளுப்பூவும் முல்லைப்பூவும்…
சேர்ந்து வந்த கன்னிப்பூ…
கொள்ளை கொள்ள இங்கு வந்தால்…
கோலம் கொள்ளும் தாழம்பூ…

பெண் : மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

BGM


Notes : Malarendra Mugamondru Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. மலரென்ற முகமின்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading