பனி விழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil


ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…

—BGM—

ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

—BGM—

ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…

—BGM—

பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

—BGM—

ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…

—BGM—

பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…

பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…


Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading