ஆயிரம் வானவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & மது பாலகிருஷ்ணன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Aayiram Vanavil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

—BGM—

ஆண் : ஓஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

ஆண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

—BGM—

பெண் : ஓஹோ… மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…

—BGM—

ஆண் : மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம்…
கடலில் கலக்கிறது…
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த…
இதயங்கள் இணைகிறது…

பெண் : கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால்…
இங்கே வாழ விரும்பிடுவான்…

ஆண் : சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது…
மீண்டும் பிரிய தயங்கிடுவான்…

பெண் : நதியில் விழுந்த நிலவின் பிம்பம்…
நனைவது கிடையாது…

ஆண் : அழகிய உறவுகள் அருகில் இருந்தால்…
சோகம் நமக்கேது…

பெண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

—BGM—

பெண் : நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…

—BGM—

ஆண் : ஓஹோ… நேற்று உருண்டு நாளை ஆகும்…
காலம் நிற்காது…
மாற்றம் கோடி வந்தால் கூட…
மனங்கள் மாறாது…

பெண் : கல்லும் மண்ணும் வீடா இல்லை…
அன்பில் செய்தது வீடாகும்…

ஆண் : கூட்டு புழுவுக்கு கூட்டால்தானே…
வண்ணம் நூறு உண்டாகும்…

பெண் : வேடந்தாங்கல் பறவையை போல…
ஒன்றாய் பறக்கிறது…

ஆண் : காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட…
வேரை மதிக்கிறது…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…

—BGM—

ஆண் : ஓ… ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…

பெண் : இது வரை யாரும் எழுதா கவிதை…
மனதில் தோன்றிடுதே…
புன்னகை எல்லாம் சமுத்திரமாக…
பொங்கி வழிகிறதே…

ஆண் : இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…
இனி தினம் தோறும் பூக்காலம்…
நம் மனதோடு மழைக்காலம்…

பெண் & ஆண் : ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து…
ஓவியம் வரைகிறதே…
ஆகாயத்தின் விண்மீன் கூட்டம்…
கண் முன் பூக்கிறதே…


Notes : Aayiram Vanavil Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading