பாட்டுக்கு பாலைவனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மாஸ்டர் ரோஹித்தேவாஆனந்த பூங்காற்றே

Paatukku Paalaivanam Song Lyrics in Tamil


ஆண் : ஆஅ ஆஅ… தானே நானே நான நானா…
தானே நானே நான நானே… தந்தனா நானே னா…

ஆண் : மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி…
மொட்டு மொட்டு முல்லைமொட்டு மெட்டுக்கள் திறக்குதடி…
விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி…
நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் தட்டை ஆடுதடி…

ஆண் : அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில…
பச்சை பசுங்கிளி ஒன்னு சூட்சமத்தில் தாவுதடி…
மோகத்துக்குள் உள்ளதெல்லாம் தாளத்துக்குள் சுத்துதடி…

ஆண் : பாடல் என்பதொரு மாயமாகுமடி…
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்…

ஆண் : ச ச ச ச ச ச ச ச ச ச ச நீ ப நீ…
ச ச ச ச ச ச ச ச ச ச ச நீ ப நீ…

ஆண் : கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா…
கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா…

ஆண் : ச ச நீ த பா நி நி த ப ம…
ப ம க ப ம க ரி ச…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

குழு : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

BGM

ஆண் : பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு…
குழு : மழை வந்து பாடும் பாட்டு…

ஆண் : காற்றுக்கு பிடித்த பாட்டு என்ன பாட்டு…
குழு : துளை மூங்கில் பாடும் பாட்டு…

ஆண் : துவைக்கின்ற மனிதன் கலைப்புக்கு மருந்து…
சோ வென்னும் இசை பாட்டு…
விதைக்கின்ற மனிதன் அலுப்புக்கும் மருந்து…
அவன் சொல்லும் நேர் பாட்டு…

ஆண் : காரா பசு கழுத்துமணி…
கன்றுக்கு புது பாட்டு…
பள்ளிகூடத்தின் கடைசிமணி…
பையனுக்கு இசை பாட்டு…

ஆண் : அட சுத்தி வரும் பூமியில் சுத்தி சுத்தி பாட்டு…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

BGM

ஆண் : பிறந்ததும் பிள்ளை கேட்க்கும் முதல் பாட்டு…
குழு : பெற்ற தாயார் பாடும் தாலாட்டு…

ஆண் : வளர்ந்ததும் நெஞ்சில் பாயும் ஒரு பாட்டு…
குழு : அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு…

ஆண் : இருமனம் இணைந்து ஒரு திருமணம் புரிகையில்…
ஊஞ்சலில் மணப் பாட்டு…
ஐ இரண்டு மாதத்துக்கு கை ரெண்டில் வளைபோடும்…
நலுங்குக்கு ஒரு பாட்டு…

ஆண் : பிள்ளை வளர பேரன் வளர…
தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு…
கடைசியிலும் ஒலித்திடுமே…
கால்கள் இழந்த கட்டில் பாட்டு…

ஆண் : அட தொடக்கமும் பாட்டில் முடிப்பதும் பாட்டு…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

ஆண் : மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி…
மொட்டு மொட்டு முல்லைமொட்டு மெட்டுக்கள் திறக்குதடி…
விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி…
நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் கட்ட ஆடுதடி…

ஆண் : அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில…
பச்சை பசுங்கிளி ஒன்னு சூட்ச்சமத்தில் தாவுதடி…
மோகத்துக்குள் உள்ளதெல்லாம் தாளத்துக்குள் சுத்துதடி…

ஆண் : பாடல் என்பதொரு மாயமாகுமடி…
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி…

ஆண் : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்…

குழு : பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்…
மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்… ம்ம்…


Notes : Paatukku Paalaivanam Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. பாட்டுக்கு பாலைவனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading