சின்னமணி பொண்ணுமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா & உமா ரமணன்இளையராஜாமல்லுவேட்டி மைனர்

Chinna Mani Ponnumani Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…

பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி…
இந்த இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்…

ஆண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
நீதான்டா கண்ணின்மணி…

ஆண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா…
அந்த இருவருக்கும் கேள்வி நான் ஒருத்தன்…

பெண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…

—BGM—

ஆண் : எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது…
வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது…
எத்தனையோ வாசலிலே கால வச்சேன் அப்போது…
வச்சதுக்கு தண்டனைய அனுபவிச்சேன் இப்போது…

ஆண் : நானாக போட்ட விதை முளைச்சுதடா நேத்து…
நீயேனும் திருந்தி நட என் கதையப் பார்த்து…

ஆண் : பொய் மான புள்ளி மானுன்னு நம்பிகிட்டா…
ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா…
இதைத் தோளில் தாங்கும் துயரம் நெஞ்சு பொறுக்கலடா…

ஆண் : சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
நீதான்டா கண்ணின்மணி…

—BGM—

பெண் : ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்…
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல…
ஊருக்குள்ள வீதியில விளையாடப் போயிருக்கேன்…
உன்னுடைய வாழ்க்கையில விளையாட நான் வரல…

பெண் : தீ மேல கைய வச்சு சுட்டுகிட்ட பாவம்…
உன் மேல கோபப்பட்டா அதில் என்னய்யா நியாயம்…

பெண் : பொன் மான நீ பொய்யின்னு சொல்லுறியே…
என் அம்மானே என்னை சொல்லுல கொல்லுறியே…
என் வாழ்வும் தாழ்வும் எனது மன்னவன் உன்னிடமே…

பெண் : ஆஆ… சின்னமணி பொண்ணுமணி…
சிரிச்சாக்க கோயில் மணி…
உன்னைப் பெத்த ராசவுக்கு…
அவதான்டா கண்ணின்மணி…

பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி…
உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி…
எங்க இருவருக்கும் பிள்ளை நீ ஒருத்தன்…

—BGM—


Notes : Chinna Mani Ponnumani Song Lyrics in Tamil. This Song from Mallu Vetti Minor (1990). Song Lyrics penned by Gangai Amaren. சின்னமணி பொண்ணுமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading