வெத்தல மடிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராசந்திரபோஸ்பாட்டி சொல்லைத் தட்டாதே

Vethala Madichi Song Lyrics in Tamil


ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
வெக்கத்தில் விடிய விடிய பூசையா…

—BGM—

ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
வெக்கத்தில் விடிய விடிய பூசையா…

—BGM—

பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா… ஆ…
வெக்கத்தில் விடிய விடிய பூசையா… ஆ…

ஆண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா…
பெண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா…

ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா…

—BGM—

ஆண் : என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா…
பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா…

ஆண் : என்னடா தலைவிதின்னு நெஞ்சுக்குள்ள சோகமா…
பெண் : மீனுக்கு வாக்கப்பட்டா தண்ணி என்ன தோஷமா…

ஆண் : விருந்தே இல்லையே வெத்தல போதுமா…
பெண் : நாமே நமக்கு விருந்தாய் ஆவோமா…

ஆண் : கஞ்சி இல்லை என்பதால் காதல் என்ன மாறுமா…
பெண் : மெத்தை இல்லை என்பதால் முத்தம் என்ன கசக்குமா…

ஆண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
பெண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா…

—BGM—

பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன்…
உத்து உத்து பாக்குறே…

ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம்…
செலவுக்கு கேக்குறேன்…

பெண் : ஒளிச்சா மறச்சி வச்சேன்…
உத்து உத்து பாக்குறே…

ஆண் : சேத்து வச்ச அழகை எல்லாம்…
செலவுக்கு கேக்குறேன்…

பெண் : பொடவ பூவ பொத்தி வைக்க பாக்குறேன்…
ஆண் : மொத்தமா பறிக்க உத்தரவு கேக்குறேன்…

பெண் : காத்திருந்த வாலிபம் காலை வரை தாங்குமா…
ஆண் : பாலைக் கண்ட பூனையோ…
பாய் விரிச்சு தூங்குமா…

பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
ஆண் : வெக்கத்தில் விடிய விடிய பூசையா…

பெண் : கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா…
ஆண் : காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா…

பெண் : வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
ஆண் : வெக்கத்தில் விடிய விடிய… ம்ம்ம் ம்ம்ம்…

—BGM—


Notes : Vethala Madichi Song Lyrics in Tamil. This Song from Paatti Sollai Thattathe (1988). Song Lyrics penned by Vairamuthu. வெத்தல மடிச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading