வண்ணாத்திப் பூச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராசந்திரபோஸ்பாட்டி சொல்லைத் தட்டாதே

Vannathi Poochi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி…
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு…
என்னவோ இருக்கு எனக்கும் கிறுக்கு…

பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி…
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு…
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு…

BGM

ஆண் : உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே…
உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே…

பெண் : பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை…
பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்லை…

ஆண் : அம்மாடி அப்போது யாருமில்லே…
செந்தாழம் பூவுக்கு சேலையில்லே…

பெண் : ஆபத்து வந்தாலே பாவமில்லை…
ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே…

ஆண் : தேன் கையில் ஒட்டாமல்…
தேன் எடுக்கத் தெரியலே…

பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி…
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு…
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு…

BGM

பெண் : என்னென்ன ஆனதின்னு தோணவில்லை…
கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே…

ஆண் : கற்பனைக் காதலுக்கு தேவையில்லே…
கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே…

பெண் : என்னை நீ காப்பாற்றும் காரணமா…
என்றாலும் எல்லைகள் மீறணுமா…

ஆண் : அம்மாடி நான் என்ன சூனியமா…
அப்பப்பா நான் கூட ஞானியம்மா…

பெண் : ஆளானப் பெண்ணையெல்லாம் ஆதரிக்கத் திட்டமா…

ஆண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி…
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு…
என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு…

பெண் : வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி…
உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு…
என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு…


Notes : Vannathi Poochi Song Lyrics in Tamil. This Song from Paatti Sollai Thattathe (1988). Song Lyrics penned by Vairamuthu. வண்ணாத்திப் பூச்சி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top