உன்னைத்தானே அழைத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். ஜானகிடி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Unnaithane Azhaithen Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

பெண் : எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…

—BGM—

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

—BGM—

பெண் : இதை தத்தை என்று நினைத்து…
பூங்கொத்து ஒன்றை வளைத்து…
முத்தம் ஒன்று கேட்டால் அந்த பூவும் கூட நாணம்…

பெண் : மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன்…
மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன்…
கருநாகம் போல் காளை ஆடுகின்றான்
ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள்

பெண் : கற்பனை செய்கிறான்…
அற்புதம் நாண் என்கிறான்…
புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா…

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

—BGM—

பெண் : புருவ வில்லை வளைத்து…
போதைக் கணையைத் தொடுத்தேன்…
காளை இதயம் வலிக்க காயம் பட்டுத் துடித்தான்…

பெண் : அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை…
அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை…
எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான்…
நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான்…

பெண் : தேவதை துடிக்கிறேன்…
தீயினில் குளிக்கிறேன்…
இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே…

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

பெண் : எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…

—BGM—


Notes : Unnaithane Azhaithen Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. உன்னைத்தானே அழைத்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading