பாலும் பழமும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாலும் பழமும்

Paalum Pazhamum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : உண்ணும் அழகை பார்த்திருப்பாயே…
உறங்க வைத்தே விழித்திருப்பாயே…
உண்ணும் அழகை பார்த்திருப்பாயே…
உறங்க வைத்தே விழித்திருப்பாயே…

ஆண் : கண்ணை இமை போல் காத்திருப்பாயே…
காதற் கொடியே கண் மலர்வாயே…
கண்ணை இமை போல் காத்திருப்பாயே…
காதற் கொடியே கண் மலர்வாயே…

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே…
பேசிப் பழகும் மொழி மறந்தாயே…
பிஞ்சு முகத்தின் ஒளி இழந்தாயே…
பேசிப் பழகும் மொழி மறந்தாயே…

ஆண் : அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே…
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே…
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே…
அன்னக் கொடியே அமைதி கொள்வாயே…

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM

ஆண் : ஈன்ற தாயை நான் கண்டதில்லை…
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை…
ஈன்ற தாயை நான் கண்டதில்லை…
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை…

ஆண் : உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன்…
உதய நிலவே கண் துயில்வாயே…
உயிரை கொடுத்தும் உனை நான் காப்பேன்…
உதய நிலவே கண் துயில்வாயே…

ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…

BGM


Notes : Paalum Pazhamum Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. பாலும் பழமும் பாடல் வரிகள்.


Scroll to Top