பாடாத பாட்டெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடரமணன் & எம்சி டிதரன் குமார்ருத்ரன்

Paadatha Pattellam Song Lyrics in Tamil


ஆண் : மைமா கேரா ஆக்கிட்டா…
டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே இவ…
இவதானே என்னோட மைனா…
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா…

ஆண் : ஊருக்குள்ள மாமா மவுச பாரு…
தாருமாறு இனி வேற யாரு…
கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்…
என் கதையில ஒழுங்கா நடப்பேன்…

—BGM—

ஆண் : உந்தன் அழகை கண்டிட…
ஹேய்… ஆயிரம் கண்களும் போதாது… ஹா ஹா…
பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு…
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்…

ஆண் : பாடாத பாடாத…
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…

—BGM—

பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்…
காணாத கண்களை காண வந்தேன்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்…
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

ஆண் : அதிசயம் என்னில் நிகழந்தது…
அவசியம் உந்தன் வருகை தந்தது…
அவசியம் உனது வருகை…
இருதய கதவுகளும் ஏங்குது…

ஆண் : ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்…
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்…
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்…
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்…

—BGM—

ஆண் : மேலாடை தென்றலில்… ஆ ஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம் ஹ்ம் ஹ்ம்…

பெண் : மேலாடை தென்றலில்… ஆ ஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம் ஹ்ம் ஹ்ம்…

ஆண் : கையோடு வளையலும்… ஜல் ஜல் ஜல்…
கண்ணோடு பேசவா… சொல் சொல் சொல்…

பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்…
காணாத கண்களை காண வந்தேன்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்…
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…

—BGM—

ஆண் : பாடாத பாடாத…

—BGM—

பெண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…

பெண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்…
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா…

—BGM—

பெண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
உறவிலே உறவிலே ஆசை வந்ததா…

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
உறவிலே உறவிலே ஆசை வந்ததா…

பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா…
ஆண் & பெண் : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா…

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்…
பெண் : காணாத கண்களை காண வந்தேன்…

ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்…
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்…


Notes : Paadatha Pattellam Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Kannadasan. பாடாத பாட்டெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading