ஆக்சிஜன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஹிப்ஹாப் தமிழா & சுதர்ஷன் அசோக்ஹிப் ஹாப் தமிழாகவண்

Oxygen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…

ஆண் : ஓடும் நதியில் இலையைப் போலே…
நாட்கள் நகர்கிறதே…
இலையின் மீது நிலவின் ஒளியோ…
சூடாய் பொழிகிறதே…

ஆண் : கலாபமே எனைக் கீறினாய்…
மழை மேகமே பிழையாகினாய்…
என் வாசலில் சுவராகினாய்…
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்…

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…
போனாய் எதனாலே…
போனாய் எதனாலே…
எதனாலே… ஓஹோ ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : உலா உலா கல்லூரி மண்ணிலா…
உன் தீண்டல் ஒவ்வொன்றும்…
எனை கொய்யும் தென்றலா…

ஆண் : முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்…
சிறு மோகம் வந்ததாய்…
சேலை சிண்ட்ரெல்லா…

ஆண் : வெட்டவெளி வானம் எங்கும்…
வட்டமுகம் கண்டேன் கண்டேன்…
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்…
யுத்தம் இடும் காதல் கொண்டேன்…

ஆண் : காலம் அது தீர்ந்தால் கூட…
காதல் அது வாழும் என்றேன்…
பாவை நீ பிரியும் போது…
பாதியில் கனவை கொன்றேன்…

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…

—BGM—

ஆண் : தனியாக நடமாடும் பிடிவாதம் உனது…
நிழலோடும் உரசாத தன்மானம் எனது…

ஆண் : எடை இல்லா பொருளல்ல…
அடி காதல் மனது…
அகலாத ஒரு நினைவு…
அது மலையின் அளவு…

ஆண் : ஆளற்ற அறையில் கூட…
அநியாய தூரம் தொல்லை…
உன் இதயம் அறியாதழகே…
என் இதயம் எழுதும் சொல்லை…

ஆண் : மௌனமாய் தூரம் நின்றால்…
மடியிலே பாரம் இல்லை…
மீண்டும் ஒரு காதல்செய்ய…
கண்களில் ஈரம் இல்லை…

—BGM—

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே…
முன்னொரு பொழுதினிலே…
மூச்சுக் காற்றை மொத்தம்…
திருடிப் போனாய் எதனாலே…

ஆண் : ஓடும் நதியில் இலையைப் போலே…
நாட்கள் நகர்கிறதே…
இலையின் மீது நிலவின் ஒளியோ…
சூடாய் பொழிகிறதே…

ஆண் : கலாபமே எனைக் கீறினாய்…
மழை மேகமே பிழையாகினாய்…

ஆண் : என் வாசலில் சுவராகினாய்…
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்…

—BGM—


Notes : Oxygen Song Lyrics in Tamil. This Song from Kavan (2017). Song Lyrics penned by Kabilan Vairamuthu. ஆக்சிஜன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading