ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & பவ்யா பண்டிட்டி. இமான்ஜீவா

Ovvundraai Thirudugiraai Song Lyrics in Tamil


ஆண் : வானம் மேகமூட்டத்துடன் காணபடும்…

ஆண் : விட்டு விட்டு மின்னல் வெட்டும்…
சத்தம் இன்றி இடி இடிக்கும்…
இருவா் மட்டும் நனையும் மழை அடிக்கும்…

ஆண் : இது கால மழை அல்ல காதல் மழை…

—BGM—

ஆண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்…
யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்…
முதலில் என் கண்களை…

குழு : கண்களை…

ஆண் : இரண்டாவது இதயத்தை…

குழு : இதயத்தை…

ஆண் : மூன்றாவது முத்தத்தை…
முத்தத்தை… ஹே ஹே ஹே ஹே…

பெண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்…
யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்…
முதலில் என் பொய்களை…
இரண்டாவது கைகளை…
மூன்றாவது வெட்கத்தை…
வெட்கத்தை…

—BGM—

ஆண் : நோகாமல் என் தோளில்…
சாய்ந்தால் போதும்…
உன் நுனி மூக்கை காதோடு…
நுழைத்தால் போதும்…

பெண் : கண்ணோடு கண் பாா்க்கும்…
காதல் போதும்…
இரு கண் கொண்ட தூரம் போல்…
தள்ளி இரு போதும்…

ஆண் : பெண்மையில் பேராண்மை…
ஆன்மையில் ஓா் பெண்மை…
கண்டறியும் நேரம் இது காதலியே…

பெண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்…
யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்…

—BGM—

பெண் : ஈரேழு மலா்கிறதே…
இதன் பெயா்தான் காதல்…
இதன் பின்னே எழுகிறதே…
அதன் பெயா்தான் காமம்…

ஆண் : மீசையோடு முளைக்கிறதே…
இதன் பெயா்தான் காதல்…
ஆசையோடு அலைகிறதே…
அதன் பெயா்தான் காமம்…

பெண் : உள்மனம் தன்னாலே…
உருகுது உன்னாலே…
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே…

ஆண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்…

பெண் : யாருக்கும் தொியாமல் திருடுகிறாய்…

ஆண் : முதலில் என் கண்களை…
இரண்டாவது இதயத்தை…
மூன்றாவது…

—BGM—

ஆண் : முத்தத்தை… ஹே ஹே ஹே ஹே…
முத்தத்தை… நா ந ந…


Notes : Ovvundraai Thirudugiraai Song Lyrics in Tamil. This Song from Jeeva (2014). Song Lyrics penned by Vairamuthu. ஒவ்வொன்றாய் திருடுகிறாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading