ஒருத்தி மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅபய் ஜோத்புர்கர் & எல் ஃபெ கொயர்டி. இமான்ஜீவா

Oruthi Maelae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்…
தோழியே நீ தூது போடி…
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்…
தோழியே நீ தூது போடி…

ஆண் : ஏ… ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே…
வாசம் ஒன்றை கொண்டாலடி…
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே…
என்னை கொன்று சென்றாலடி…

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்…
தோழியே நீ தூது போடி…
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்…
தோழியே நீ தூது போடி…

—BGM—

ஆண் : அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு…
ஆனாலுமே செல்வாயா…
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்…
வேண்டாமென சொல்வாயா…

ஆண் : முத்தங்கள் நூறு நான் தந்தேன்…
கள்ளியாய் தூக்கி போனாலே…
என்னிடம் மீண்டும் தாவென்று…
கேட்டதும் மௌனம் ஆனாலே…
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா…

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன்…
தோழியே நீ தூது போடி…
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்…
தோழியே நீ தூது போடி…

—BGM—

ஆண் : அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள்…
வேறாறையும் பாா்க்காதே…
அவளை அவளை பழகி தொலைத்த இதயம்…
வேறாறையும் ஏற்காதே…

ஆண் : தோழியே நீ போய் கேட்டாலும்…
காதலே இல்லை சொல்வாளே…
காலிலே விழுந்து கேட்டாலும்…
பொய்யிலே நம்மை கொல்வாளே…
நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி…

ஆண் : ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்…
தூது போக யாரும் வேண்டாம்…
பெண் : வேண்டாம்…

ஆண் : வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல…
கண்கள் போதும் வாா்த்தை வேண்டாம்…
பெண் : வேண்டாம்…

ஆண் : ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே…
வாசம் ஒன்றை கொண்டாலடி…
கண் சொல்வதை உன் வாயில் கூறினால்…
நான் கொஞ்சம் வாழ்வேனடி…


Notes : Oruthi Maelae Song Lyrics in Tamil. This Song from Jeeva (2014). Song Lyrics penned by Madhan Karky. ஒருத்தி மேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading