ஒரு வெட்கம் வருதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைநரேஷ் ஐயர் & ஸ்ரேயா கோஷல்ஜேம்ஸ் வசந்தன்பசங்க

Oru Vetkam Varudhe Song Lyrics in Tamil


பெண் : ஒரு வெட்கம் வருதே வருதே…
சிறு அச்சம் தருதே தருதே…
மனம் இன்று அலை பாயுதே…

பெண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

பெண் : போக சொல்லி கால்கள் தள்ளும்…
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்…
இது முதல் அனுபவமே…
இனி இது தொடர்ந்திடுமே…
இது தரும் தடுமாற்றம் சுகம்…

ஆண் : மழை இன்று வருமா வருமா…
குளிர் கொஞ்சம் தருமா தருமா…
கனவென்னை களவாடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

ஆண் : கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்…
கூறு போட்டு கொல்லும் இன்பம்…
பற பற பறவெனவே…
துடி துடித்திடும் மனமே…
வர வர வர கரை தாண்டிடுமே…

BGM

பெண் : மேலும் சில முறை…
உன் குறும்பிலே…
நானே தோற்கிறேன்…

பெண் : உன் மடியினில்…
என் தலையணை…
இருந்தால் உறங்குவேன்…

ஆண் : ஆணின் மனதிற்குள்ளும்…
பெண்மை இருக்கிறதே…
தூங்க வய்திடவே…
நெஞ்சம் துடிக்கிறதே…

பெண் : ஒரு வரி நீ சொல்ல…
ஒரு வரி நான் சொல்ல…
எழுதிடும் காதல் காவியம்…
அனைவரும் கேட்கும் நாள் வரும்…

ஆண் : மழை இன்று வருமா வருமா…
குளிர் கொஞ்சம் தருமா தருமா…
கனவென்னை களவாடுதே…

பெண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

ஆண் : கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்…
கூறு போட்டு கொல்லும் இன்பம்…

பெண் : இது முதல் அனுபவமே…
இனி இது தொடர்ந்திடுமே…

ஆண் : வர வர வர கரை தாண்டிடுமே…

BGM

ஆண் : காற்றில் கலந்து நீ…
என் முகத்திலே ஏனோ மோதினாய்…
பூ மரங்களில் நீ இருப்பதால்…
என் மேல் உதிர்கிறாய்…

பெண் : தூது அனுப்பிடவே…
நேரம் எனக்கில்லையே…
நினைத்த பொழுதினிலே…
வரணும் எதிரினிலே…

ஆண் : வெயிலினில் ஊர்கோலம்…
இதுவரை நாம் போனோம்…
நிகழ்கிறதே கார்காலமே…
நனைந்திடுவோம் நாள் தோறுமே…

பெண் : ஒரு வெட்கம் வருதே வருதே…
சிறு அச்சம் தருதே தருதே…
மனம் இன்று அலை பாயுதே…

ஆண் : இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…

பெண் : போக சொல்லி கால்கள் தள்ளும்…

ஆண் : நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும்…

பெண் : இது முதல் அனுபவமே…

ஆண் : துடி துடித்திடும் மனமே…
வர வர வர கரை தாண்டிடுமே…


Notes : Oru Vetkam Varudhe Song Lyrics in Tamil. This Song from Pasanga (2009). Song Lyrics penned by Thamarai. ஒரு வெட்கம் வருதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading