அலே அலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & சித்ரா சிவராமன்ஏ.ஆர்.ரகுமான்பாய்ஸ்

Ale Ale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது…

ஆண் : அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…

ஆண் : ஹே… ஆனந்த தண்ணீர்…
மொண்டு குளித்தேன்…

பெண் : ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்…

ஆண் : கற்கண்டைத் தூக்கிக் கொண்டு…
நடந்தேன் ஒரு எறும்பாய்…

பெண் : நான் தண்ணீரில் மெல்ல…
மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்…

ஆண் : அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…

பெண் : அலே அலே அலே அலே…

ஆண் : அலே அலே அலே…
அலே அலே அலே…

ஆண் : காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…
காற்றாய் பறக்குது மனமே… ஓஓஓ…

ஆண் & பெண் : காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…

ஆண் : காற்றாய் பறக்குது மனமே… ஓஓஓ…

—BGM—

ஆண் : நரம்புகளில் மின்னல் நுழைகிறதே…
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே…

பெண் : வெண்ணிலவை இவன் வருடியதும்…
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்…

ஆண் : ஒரு விதை இதயத்தில் விழுந்தது…
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே…

பெண் : அலே அலே அலே அலே…

ஆண் : அலே அலே அலே…
அலே அலே அலே…

பெண் : கலங்காத குளமென இருந்தவள்…
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்…

ஆண் : காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…
காற்றாய் பறக்குது மனமே… ஓஓஓ…

ஆண் & பெண் : காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…

ஆண் : காற்றாய் பறக்குது மனமே… ஓஓஓ…

ஆண் : எகிறி குதித்தேன்…
பெண் : வானம் இடித்தது…
ஆண் : பாதங்கள் இரண்டும்…
பெண் : பறவையானது…

ஆண் : விரல்களின் காம்பில்…
பெண் : பூக்கள் முளைத்தது…
ஆண் : புருவங்கள் இறங்கி…
பெண் : மீசையானது…

ஆண் : அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…

—BGM—

பெண் : மணல் முழுதும் இன்று சர்க்கரையா…
கடல்முழுதும் இன்று குடிநீரா…

ஆண் : கரைமுழுதும் உந்தன் சுவடுகளா…
அலைமுழுதும் உந்தன் புன்னகையா…

பெண் : ஆஆ… காகிதம் என்மேல் பறந்ததும்…
அது கவிதைநூல் என மாறியதே…

ஆண் : அலே அலே அலே அலே…

பெண் : அலே அலே அலே…
அலே அலே அலே…

ஆண் : வானவில் உரசியே பறந்ததும்…
இந்த காக்கையும் மயில் என மாறியதே…

ஆண் : காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…
காற்றாய் பறக்குது மனமே… ஓஓஓ…

ஆண் & பெண் : காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…
காற்றாய் பறக்குது மனமே… ஆஆஆ…

—BGM—


Notes : Ale Ale Song Lyrics in Tamil. This Song from Boys (2003). Song Lyrics penned by Kabilan. அலே அலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading