ஒத்தையடி பாதையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமானசி & இலா அருண்வித்யாசாகர்சிநேகிதியே

Othayadi Pathayile Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…

BGM

பெண் : கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…

BGM

பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து…
சீக்கிரமா பத்த வச்சு…
நெருப்பேத்தி வெறுப்பேத்தி…
கரடியை சுட்டு தப்பி போவேன்…

BGM

பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…

BGM

பெண் : பாட்டிமா சொல்லும் பாடம்…
பாதியில் மறந்தே போகும்…
வாழ்க்கையின் பாடம் மட்டும் மறக்காதே…

BGM

பெண் : சதுரமாய் முட்டை இல்லை…
சந்தோஷமே வாழ்க்கை இல்லை…
துன்பத்திலும் ஞானம் உண்டு மறக்காதே…

பெண் : தைரியமே நம் சொத்து…
மத்ததெல்லாம் பம் மாத்து…
பயணம் போ பயணம் போ…
பள்ளம் மேடு ரெண்டும் பார்த்து… ஓஹோ ஓயே…

பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…

BGM

பெண் : அரைஅடி நீளம் நாக்கு…
ஆறடி ஆளை கொல்லும்…
ஆணவம் கொண்டு வீணாய் ஏசாதே…

பெண் : எழுத்தறிவோ இல்லை போதும்…
அனுபவமே சோறு போடும்…
தங்கத்த சுமந்தாலும் பெட்ரோலில்தான் வண்டி ஓடும்… ம்ம்ம்…

பெண் : ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…

பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து…
சீக்கிரமா பத்த வச்சு…
நெருப்பேத்தி வெறுப்பேத்தி…
கரடியை சுட்டு தப்பி போவேன்…

BGM


Notes : Othayadi Pathayile Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. ஒத்தையடி பாதையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading