ராதை மனதில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் & சங்கீதா சஜித்வித்யாசாகர்சிநேகிதியே

Radhai Manathil Song Lyrics in Tamil


BGM

பெண் : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…

பெண் : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்…
கோதை ராதை நடந்தால்…
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்…
மூச்சு வாங்கி உறைந்தாள்…

குழு : பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்…
பாவை மறந்து தொலைந்தாள்…
நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று…
நிலவின் ஒளியை இழுத்தாள்…

பெண் : நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால்…
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்…
கண்ணன் தேடி வந்த மகள்…
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்…

பெண் : தான் இருக்கின்ற இடத்தினில்…
இருதயம் காணவில்லை…
எங்கே எங்கே சொல் சொல்…

பெண் : கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டுபிடிக்க…

குழு : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…

BGM

பெண் : கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு…
காந்தம் போல இழுக்கும்…
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது…
மாய கண்ணன் வழக்கம்…

பெண் : காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட…
காதல் ராதை அலைந்தால்…
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு…
ஆசை நோயில் விழுந்தால்…

பெண் : உதடு துடிக்கும் பேச்சு இல்லை…
உயிரும் இருக்கு மூச்சு இல்லை…
வந்த பாதை நினைவு இல்லை…
போகும் பாதை புரியவில்லை…

பெண் : உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்…
பேதை ராதை ஜீவன் கொள்வாள்…
கண்ணா இங்கே வா வா…

பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க…
கண்ணா வா உயிர் கொடுக்க…

பெண் : ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…

BGM

பெண் : கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று…
அந்த கன்னி கண்கள் விழித்தாள்…
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல…
வெறும் காற்று என்று திகைத்தாள்…

பெண் : கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி…
கைகள் நீட்டி அழைத்தாள்…
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை…
இங்கு கண்டு பிடித்தாள்…

பெண் : விழியின் சிறகை வாங்கிக்கொண்டு…
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்…
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு…
கூவி கூவி அவள் அழைத்தாள்…

பெண் : அவள் குறை உயிர் கரையும்முன்…
உடல் மண்ணில் சரியும்முன்…
கண்ணா கண்ணா நீ வா…

பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க…
கண்ணா வா உயிர் கொடுக்க…

BGM


Notes : Radhai Manathil Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. ராதை மனதில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading