தேவதை வம்சம் நீயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & சுஜாதா மோகன்வித்யாசாகர்சிநேகிதியே

Devadhai Vamsam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தேவதை வம்சம் நீயோ…
தேனிலா அம்சம் நீயோ…
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ…

பெண் : பூக்களின் வாசம் நீயோ…
பூங்குயில் பாஷை நீயோ…
சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ…

—BGM—

பெண் : நட்சத்திர புள்ளி…
வானம் எங்கும் வைத்து…
நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்…

—BGM—

பெண் : நீ இருக்கும் இடம்…
வேடந்தாங்கல் என்று…
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்…

—BGM—

பெண் : பெண்பூவே நீயும் ஆட…
முகில்கள் ஊஞ்சல் போடும்…
உலாவும் தென்றல் வந்து…
உன் ஊஞ்சலை அசைத்தே போகும்…

பெண் : பகலினில் முழுவதும் வெயிலினிலே…
உனை சுட்டு வருந்திய வானம் அது…
இரவினில் முழுவதும் அதை எண்ணியே…
பனித்துளி சிந்தியே அழுகிறது…

—BGM—

பெண் : தேவதை வம்சம் நீயோ…
தேனிலா அம்சம் நீயோ…
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ…

—BGM—

பெண் : வாழ்வின் திசை மாறும்…
பாதைகளும் மாறும்…
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே…

—BGM—

பெண் : சொந்தம் நூறு வரும்…
வந்து வந்து போகும்…
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே…

பெண் : உன் பாதம் போகும் பாதை…
மண்ணுக்கு சந்தோஷங்கள்…
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம்…
குயிலுக்கு ஆனந்தங்கள்…

பெண் : பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்…
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்…
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்…
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்…

—BGM—

பெண் : தேவதை வம்சம் நீயோ…
தேனிலா அம்சம் நீயோ…
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ…

—BGM—


Notes : Devadhai Vamsam Song Lyrics in Tamil. This Song from Snegithiye (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவதை வம்சம் நீயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading