அடடா ஒண்ணும் சொல்லாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & சக்திஸ்ரீ கோபாலன்டி. இமான்வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

Adada Onnum Solladha Song Lyrics in Tamil


BGM

பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத…
அழகா என்னைக் கொல்லாத…
அணைச்சா தள்ளிச் செல்லாத…
அணையைக் கட்டிப் போடாத…

பெண் : அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே…
இதழில் தேன் எடுக்க நீ வரியா…
ஆனால் பார்வையைத்தான் தீப்போல கொடுத்தானே…
ஹைய்யோ உன்னால் எரிஞ்சேன் நானே…

BGM

ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத…
அழகா என்னைக் கொல்லாத…
அணைச்சா தள்ளிச் செல்லாத…
அணையைக் கட்டிப் போடாத…

ஆண் : அடடா பிரம்மன் உன்னை பூப்போல படைச்சானே…
இதழில் தேன் எடுக்க நான் வரவா…
ஆனால் பார்வையைத்தான் தீப்போல கொடுத்தானே…
ஹைய்யோ பெண்ணே எரிஞ்சேன் நானே…

BGM

பெண் : வயதும் மனதும் உனைக் கண்டாலே இன்று…
கலங்குதடா நான் துடிப்பேன்…

ஆண் : வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு…
இடையினம்தான் நான் ரசிப்பேன்…

பெண் : ஹோ… குறும்பாக நீ சிரிக்க சாஞ்சி போனேன்…
அதற்கு இந்த ஊரில் இல்லை விலையே…

ஆண் : ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்துதானே…
அழகாக செஞ்சு வைச்ச சிலையே…

ஆண் & பெண் : இரு இதயம் இணையும் தருணம் போகாதே…

பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத…
அழகா என்னைக் கொல்லாத…
அணைச்சா தள்ளிச் செல்லாத…
அணையைக் கட்டிப் போடாத…

BGM

ஆண் : இதழும் இதழும் அடி ஒன்றாக சேர…
விரும்பிடுதே நெருங்கிடுதே…

பெண் : இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட…
இடைவெளிகள் குறைந்திடுதே…

ஆண் : சிரிச்சாலே கன்னம் எங்கும் வண்ணம் பூசும்…
அழகான பஞ்சவர்ண கிளியே…

பெண் : சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும்…
சீ போடா சிக்க வைச்ச என்னையே…

ஆண் & பெண் : இரு இதயம் இணையும் தருணம் போகாதே…

ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத…
பெண் : அழகா என்னைக் கொல்லாத…
ஆண் : ஹேய்… அணைச்சா தள்ளிச் செல்லாத…
பெண் : அணையைக் கட்டிப் போடாத…


Notes : Adada Onnum Solladha Song Lyrics in Tamil. This Song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Song Lyrics penned by Na. Muthukumar. அடடா ஒண்ணும் சொல்லாத பாடல் வரிகள்.


Scroll to Top