| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | டி.எம். சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | ஆனந்த ஜோதி |
Oru Thai Makkal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஆண் : ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
ஆண் : சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க…
—BGM—
ஆண் : பொதிகை மலையில் பிறந்தவளாம்…
பூவை பருவம் அடைந்தவளாம்…
குழு : பொதிகை மலையில் பிறந்தவளாம்…
பூவை பருவம் அடைந்தவளாம்…
ஆண் : கருணை நதியில் குளித்தவளாம்…
காவிரி கரையில் களித்தவளாம்…
குழு : கருணை நதியில் குளித்தவளாம்…
காவிரி கரையில் களித்தவளாம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
ஆண் : சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க…
—BGM—
ஆண் : உரிமையில் நான்கு திசை கொண்டோம்…
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்…
குழு : மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்…
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்…
ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
—BGM—
ஆண் : தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்…
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்…
குழு : தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்…
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்…
ஆண் : அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்…
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
ஒன்றே எங்கள் குலமென்போம்…
தலைவன் ஒருவன் தானென்போம்…
சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
ஆண் : சமரசம் எங்கள் வாழ்வென்போம்…
குழு : ஒரு தாய் மக்கள் நாமென்போம்…
Notes : Oru Thai Makkal Song Lyrics in Tamil. This Song from Anandha Jodhi (1963). Song Lyrics penned by Kannadasan. ஒரு தாய் பாடல் வரிகள்.

