இது வரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணச்சந்திரன் & எஸ்.பி.சைலஜாஇளையராஜாதூரத்து பச்சை

Ithu Varaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…

பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…

ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா…

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…

BGM

ஆண் : ஆகாய மேகமே நீர்விட்டது…
பெண் : ஆனந்தம் பூமியில் வேர் விட்டது…
ஆண் : பூவோடு காயும் கொடி கொண்டது…
பெண் : கொடியோடு யாவும் மடி கண்டது…

ஆண் : மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது…

BGM

பெண் : என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ…

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…

BGM

பெண் : ஆரம்பமானது ஆலிங்கனம்…
ஆண் : அது இந்தக் காதலில் ஆலாபனம்…
பெண் : ஏகாந்த நேரம் ராஜாங்கமோ…
ஆண் : ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ…

பெண் : உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது…

BGM

ஆண் : உற்சாக கங்கை ஒன்று பாயாதோ…

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…

பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது…
நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது…

ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா…

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்…
இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்…


Notes : Ithu Varaiyil Song Lyrics in Tamil. This Song from Dhoorathu Pachai (1987). Song Lyrics penned by Vaali. இது வரையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading