| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | புன்னகை மன்னன் |
Kaalakaalamaaga Vazhum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
பெண் : பூமி எங்கள் சீதனம்…
வானம் எங்கள் வாகனம்…
ஆண் : யாரடா நான் நீயாடா ஹே…
பகைவனே போ…
பெண் : கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
—BGM—
பெண் : வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை…
ஒரு வட்டம் இல்லை…
தடை யாரும் இல்லை…
ஆண் : எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை…
ஒரு கேள்வி இல்லை…
மலர் மாலை நாளை…
பெண் : முள்ளை யார் அள்ளிப் போட்டாலும்…
முல்லை பூவாக மாறாதோ…
முள்ளை யார் அள்ளி போட்டாலும்…
முல்லை பூவாக மாறாதோ…
ஆண் : ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது…
பகையே பகையே விலகு விலகு ஓடு…
ஆண் : கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
பெண் : காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
—BGM—
ஆண் : மோதி பார்க்காதே என்னை கண்டு…
நீ வாழை தண்டு…
இவன் யானை கன்று…
பெண் : நாளும் போராடும் வீரம் உண்டு…
சுயமானம் உண்டு…
பகை வெல்வோம் இன்று…
ஆண் : பாதை இல்லாமல் போனாலும்…
காதல் தேரோட்டம் நில்லாது…
பாதை இல்லாமல் போனாலும்…
காதல் தேரோட்டம் நில்லாது…
பெண் : பந்தம் நம் பந்தம்…
என்றென்றும் தீ பந்தமே…
ஆண் : இணைவோம் இணைவோம்…
பகையை சுடுவோம் நாமே…
ஆண் : கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
பெண் : பூமி எங்கள் சீதனம்…
வானம் எங்கள் வாகனம்…
ஆண் : யாரடா நான் நீயாடா ஹே…
பகைவனே போ…
ஆண் & பெண் : கால காலமாக வாழும்…
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்…
காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை…
எங்கள் சொப்பனம்…
Notes : Kaalakaalamaaga Vazhum Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. கால காலமாக பாடல் வரிகள்.


