ஒரு ரோசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅந்தோனி தாசன் & ஏ.வி. பூஜைடி. இமான்ஜீவா

Oru Rosa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…

—BGM—

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…
ஒரு ரோசா உன்ன தூசா…
ஊதி போனாலே அழகேசா…

ஆண் : லாந்தர் விளக்கு குள்ளார…
மாட்டி முழிக்கும் ஈசலுதான்…
காதல் நெருப்பில் விழுந்தாலே…
மனசு முழுக்க தீசலுதான்…
ஒரு உசுரு இங்க ஆடுது ஊசலுதான்…

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…
ஒரு ரோசா உன்ன தூசா…
ஊதி போனாலே அழகேசா…

—BGM—

ஆண் : காலிஃப்ளவரும் வாசன தூக்கும்…
காதல் கிறுக்கு முன்னாடி…
காலி இதயம் அழுகைய தீக்கும்…
காதல் கிறுக்கு பின்னாடி…

ஆண் : ஒசர ஒசர உன்ன கூட்டிடு போய்…
பறக்க பழக்கி விடும் முன்னாடி…
அசர அசர உன்ன போட்டு அடிச்சி…
சரக்க பழக்குமே பின்னாடி…
நீ தரையில விழுகிற கண்ணாடி…

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…

—BGM—

ஆண் : சாக் பீஸ்ஸ சாக்லேட்டாட்டம்…
சப்பி கெடந்தான் அன்னைக்கு…
டேப் இல்லா கேசட்ட போட்டு…
பாட்டு கேட்டான் இன்னைக்கு…

ஆண் : மரத்தில் மரத்தில் அவன் காம்பஸ கீறி…
இதயம் வரைஞ்சி வச்சான் அன்னைக்கி…
இடியில் இடியில் அந்த பூ மரம் பூரா…
கருகி போச்சுடா இன்னைக்கு…
அட கடைசியில் வந்தான் தண்ணிக்கி…

ஆண் : ஒரு ரோசா உன்ன லூசா…
ஆக்கி போனாலே அவ லேசா…
ஒரு ரோசா உன்ன தூசா…
ஊதி போனாலே அழகேசா…

ஆண் : ஒரு ரோசா…


Notes : Oru Rosa Song Lyrics in Tamil. This Song from Jeeva (2014). Song Lyrics penned by Madhan Karky. ஒரு ரோசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading