செல்லம்மா செல்லம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & வர்ஷா ரஞ்சித்வித்யாசாகர்ஆருத்ரா

Chellama Chellam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : செல்லம்மா செல்லம்… ம்ம்ம்ம்ம்…
செல்லம்மா செல்லம்…
என் பேச்சு வெல்லும்…
தித்திக்குதா தித்திக்குதா…

பெண் : குட்டிமா கூட…
குயிலம்மா பாட…
ஒத்துக்குதா ஒத்துக்குதா…

பெண் : அப்பாவுக்கு அம்மா நானே…
அம்மாவுக்கும் அப்பா நானே…
செல்லம்தானே… ஆஆஆஆ…

ஆண் : செல்லம்மா செல்லம்…
உன் பேச்சு வெல்லம்…
தித்திக்குதே தித்திக்குதே…

ஆண் : குட்டிமா கூட…
குயிலம்மா பாட…
ஒத்துக்குதே ஒத்துக்குதே…

—BGM—

ஆண் : தங்கை இவளின் தலை கோத…
மயில் தோகையும் ஏங்காதா…
பூக்கள் எல்லாம் இவளுக்கு முன்…
பூப்பூக்கவே தயங்காதா…

பெண் : காளான் குடை குள்ளேயே…
தூங்கும் எறும்பை போல்…
அப்பா தோளோடு சிறு தூக்கம்…
அடடா பாசத்தில் பழைய சாதத்தில்…
அம்மா கைவாசம் ருசி ஆகும்…

ஆண் : நம் சொந்தம் போல் சொர்க்கமும் இருக்குமா…
தாய் பூமுகம் தரும் சுகம் கிடைக்குமா…
சொல்லமா… ஆ…

பெண் : செல்லம்மா செல்லம்…
என் பேச்சு வெல்லும்…
தித்திக்குதா தித்திக்குதா…

பெண் : குட்டிமா கூட…
குயிலம்மா பாட…
ஒத்துக்குதா ஒத்துக்குதா…

—BGM—

ஆண் : வேலன் அழகோ மயிலாடு…
எங்கள் மயிலே விளையாடு…

பெண் : கோயில்தானே நம் வீடு…
குல தெய்வங்கள் நம்மோடு…

ஆண் : எங்கள் வீட்டுக்கு யார்தான் வந்தாலும்…
உளியின் சத்தங்கள் வரவேற்கும்…
அளவே இல்லாத அன்பை மட்டும்தான்…
தெய்வம் நம்மோடு எதிர்பார்க்கும்…

பெண் : என் அண்ணனின் கைகளே ஊஞ்சலா…
என் தாய் மொழி ஆனதே கொஞ்சலா…
அம்மம்மா… ஆ…

—BGM—


Notes : Chellama Chellam Song Lyrics in Tamil. This Song from Aaruthra (2018). Song Lyrics penned by Pa Vijay. செல்லம்மா செல்லம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading