ஒரு பொன் மானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Oru Ponmaanai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

ஆண் : அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி…
தாமரை பூ மீது விழுந்தனவோ…
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்…
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ…

ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி…
கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்…

BGM

ஆண் : ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே…
அதில் பரதம்தான் துளிர் விட்டு…
பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது…
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…

BGM

ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்…
அரங்கேற அதுதானே உன் கன்னம்…
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்…
நடத்திடும் வானவில் உன் வண்ணம்…

ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட…
புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்…

BGM

ஆண் : கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்…
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி…
மதி தன்னில் கவி சேர்க்குது…
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…
அவள் விழிகளில் ஒரு பழரசம்…
அதை காண்பதில் எந்தன் பரவசம்…

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்…
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்…

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது…
சங்கீதம் நீ பாடு…


Notes : Oru Ponmaanai Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. ஒரு பொன் மானை பாடல் வரிகள்.


Scroll to Top