நானும் உந்தன் உறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்மைதிலி என்னை காதலி

Naanum Undhan Uravai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

BGM

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…
நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

ஆண் : தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…
தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…

ஆண் : சிறகுகள் உடைந்ததடி…
குருதியில் நனைந்ததடி…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

BGM

ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்…
சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா…

BGM

ஆண் : வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்…
வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா…

BGM

ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே…
இனிமை காணுவது விதியம்மா…

BGM

ஆண் : அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே…
துவைத்து சிதைப்பது சதியம்மா…

BGM

ஆண் : உடல்களை அழித்திட…
ஊருக்குள் பலருண்டு பாரம்மா…
உள்ளத்தை பிரித்திட…
பாருக்குள் எவருண்டு சொல்லம்மா…

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை…

BGM

ஆண் : வீணை ஏரிகிறது…
விரல்கள் வேகிறது…
நாதம் மீட்டுகிறேன் வாராயோ…

BGM

ஆண் : புயலும் வலுக்கிறது…
கடலும் கொதிக்கிறது…
படகை செலுத்துகிறேன் வாராயோ…

BGM

ஆண் : எண்ணை இழந்த பின்னும்…
எரிய துடிக்க எண்ணும்…
தீபம் போல மனம் அலைகிறது…

BGM

ஆண் : என்னை இழந்த பின்னும்…
உன்னை காக்க எண்ணும்…
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது…

BGM

ஆண் : வாழ்வது ஒரு முறை…
உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்…
சாவது ஒரு முறை…
உனக்கென சாவதே பெருமை என்பேன்…

ஆண் : நானும் உந்தன் உறவை…
நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை…
வேடன் செய்த லீலை…

ஆண் : சிறகுகள் உடைந்ததடி…
குருதியில் நனைந்ததடி…
உயிரே… ஏ… உயிரே… ஏ…

BGM


Notes : Naanum Undhan Uravai Song Lyrics in Tamil. This Song from Mythili Ennai Kaathali (1986). Song Lyrics penned by T. Rajendar. நானும் உந்தன் உறவை பாடல் வரிகள்.


Scroll to Top