மலர்களைப் போல் தங்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாசமலர்

Malargalaipol Thangai Song Lyrics in Tamil

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…

BGM

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…

BGM

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

ஆண் : கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

BGM

ஆண் : மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை…
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டால்…
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை…
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டால்…

ஆண் : மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்…

BGM

ஆண் : மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்…
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

BGM

ஆண் : ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்…
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்…

BGM

ஆண் : வாழிய கண்மணி வாழிய என்றான்…
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

BGM

ஆண் : பூமணம் கொண்டவள்…
பால்மணம் கண்டாள்…
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்…

ஆண் : பூமணம் கொண்டவள்…
பால்மணம் கண்டாள்…
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்…

BGM

ஆண் : மாமனைப் பாரடி கண்மணி என்றாள்…
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்…

ஆண் : மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…

ஆண் : கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்…
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…

ஆண் : கற்பனைத் தேரினில் பறந்து சென்றால்…
பறந்து சென்றால்…
பறந்து சென்றால்…

Notes : Malargalaipol Thangai Song Lyrics in Tamil. This Song from Pasamalar (1961). Song Lyrics penned by Kannadasan. மலர்களைப் போல் தங்கை பாடல் வரிகள்.

Scroll to Top