மாமரத்து பூ எடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆபாவாணன் எஸ்.என். சுரேந்தர் & பி.எஸ். சசிரேகாமனோஜ் கியான்ஊமை விழிகள்

Maamarathu Poo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…
கண்ணே புது நாடகம்…
விரைவில் அரங்கேறிடும்…

ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…

—BGM—

பெண் : கூந்தலில் பூச்சூடினேன்…
கூடலையே நாடினேன்…
கூடிவிட மனது துடிக்குது… ஓஓ…
கூடவந்த நாணம் தடுக்குது…

பெண் : கூந்தலில் பூச்சூடினேன்…
கூடலையே நாடினேன்…
கூடிவிட மனது துடிக்குது… ஓஓ…
கூடவந்த நாணம் தடுக்குது…

ஆண் : கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது…
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது…

ஆண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…

—BGM—

ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா…
சிற்றிடை மெலிந்ததேனம்மா…
பத்துவிரல் அணைக்கத்தானம்மா… ஓஓ…
முத்து ரதம் எனக்குத்தானம்மா…

ஆண் : சித்திரப்பூவிழி பாரம்மா…
சிற்றிடை மெலிந்ததேனம்மா…
பத்துவிரல் அணைக்கத்தானம்மா… ஓஓ…
முத்து ரதம் எனக்குத்தானம்மா…

பெண் : உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது…
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது…

பெண் : மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா…
கண்ணா புது நாடகம்…
விரைவில் அரங்கேறட்டும்…

ஆண் & பெண் : மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்…

—BGM—


Notes : Maamarathu Poo Song Lyrics in Tamil. This Song from Oomai Vizhihal (1986). Song Lyrics penned by Abavanan. மாமரத்து பூ எடுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading