ஒரு பெண் புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்தேவாஅண்ணாமலை

Oru Pen Pura Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…

ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…

—BGM—

ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்…
தூக்கம் கண்ண சொக்குமே…
அது அந்த காலமே…

ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்…
கண்ணில் தூக்கம் இல்லையே…
அது இந்த காலமே…

ஆண் : என் தேவனே… ஓ… தூக்கம் கொடு…
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு…
பாலைவனம் கடந்து வந்தேன்…
பாதங்களை ஆறவிடு…

ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…

ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…

—BGM—

ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா…
அன்று பாடம் படித்தேன்…
அது பழைய பழமொழி…

ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே…
இதை நெஞ்சில் நிறுத்து…
இது புதிய பழமொழி…

ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை…
பெண் பிள்ளையோ போகும் வரை…
விழி இரண்டும் காயும் வரை…
அழுதுவிட்டேன் ஆனவரை…

ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட…
என் உள்ளம் திண்டாட…
என்ன வாழ்க்கையோ…

ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே…
எந்தன் நிம்மதி போனதே…
மனம் வாடுதே…
ஒரு பெண் புறா…


Notes : Oru Pen Pura Song Lyrics in Tamil. This Song from Annamalai (1992). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பெண் புறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading