ஒரு நூறுமுறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்யபிரகாஷ் & சக்திஸ்ரீ கோபாலன்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Oru Nooru Murai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…

ஆண் : நெடுந்தூரம் முன்னே நீண்டு கொண்டே செல்ல…
ஒரு வார்த்தையாலே தூரத்தை நீ கொல்ல…

ஆண் : ஏதேனும் சொல் பெண்ணே…
நீ சொல்லும் சொல் தேனே…

பெண் : ம்ம்ம்… என்னை நீ எடுத்தாய் சிறை…
தாமரை பூ வருமோ தரை…
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை…

பெண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை…
நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை…
வேற் ஒன்றும் தோன்றவில்லை நான் மழலை…

ஆண் : ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…

—BGM—

பெண் : நான் மழையினில் நனைத்தது இல்லை…
ஓ மதுவினில் குளித்தது இல்லை…
நான் மரகத மலைகளை பார்க்க…
என் கனவிலும் வாய்த்தது இல்லை…

பெண் : விலாவில் சிறகுகள் கண்டேன்…
உலாவ உன்னுடன் வந்தேன்…
எழுந்தேன் விழுந்தேன் கரைந்தேன்…

ஆண் : ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…

—BGM—

ஆண் : நீ பறந்திடும் உயரத்தில் இருந்து…
குழு : இருந்து…
ஆண் : ஓ பார்வையின் பார்வையில் பார்த்தாய்…
குழு : பார்த்தாய்…

ஆண் : ஆ சிறு சிறு உருவங்கள் விரைந்து…
குழு : விரைந்து…
ஆண் : ஓ நகர்வதை எறும்பென நினைத்தாய்…

ஆண் : எல்லாமே நடக்குது இன்று…
உனக்கும் பிடிக்கிது நன்று…
பெண் : ம்ம்ம்… மறந்தேன் எனை நான் இழந்தேன்…

பெண் : இது போலே எந்த நாளும் என்றும் இல்லை…
இனி மேலும் வரும் என்று நம்பவில்லை…

பெண் : வான் எங்கும்…
குழு : ஹே ஹே…
பெண் : ஓ கார்மேகம்…
குழு : ஹே…

பெண் : வான் என்றால்…
குழு : ஹே ஹே…
பெண் : ஹே நீர் வார்க்கும்…
குழு : ஹே…

ஆண் : ஒரு தோகை மயில் தொற்றி கொண்ட தோளில்…
மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில்…

ஆண் : ஏதேனும் சொல் பெண்ணே…
நீ சொல்லும் சொல் தேனே…

பெண் : ஓ ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை…
தாமரை பூ வருமா தரை…
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை…

ஆண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும் அதை…
நீ சொல்லவில்லை என்றால் பிழை…
போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை…

—BGM—


Notes : Oru Nooru Murai Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. ஒரு நூறுமுறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading