அணங்கே சினுங்கலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, கிரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி & சரண்யா கோபிநாத்ஹாரிஸ் ஜெயராஜ்தேவ்

Anangae Sinungalama Song Lyrics in Tamil


BGM

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இதுதான் தருணம் தனியே வரணும்…

BGM

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

ஆண் : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி…
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே…
ஓ… வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி…
சிரிப்பது இயற்கையின் சதிதானே…

பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்…
சுவர் எங்கும் உன் படங்கள்…
நடந்தாலும் உந்தன் தடங்கல்…
பொல்லாத நினைவுகள்…

ஆண் : அணங்கே சினுங்கலாமா…
நெருங்கி அணைக்க நான் இருக்க…
குழு : இது தான் தருணம் தனியே வரணும்…

ஆண் : தெரிந்தே நடிக்கலாமா…
இதழை துணிந்து யார் கொடுக்க…
குழு : முதலில் தருணம் பிறகே பெறனும்…

BGM

பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்…
விழுங்கும் விழியை சாடுகிறேன்…
அடடா அழகா விழிகள் கழுகா…

BGM

பெண் : நொடியும் பிரியமாட்டேன்…
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்…
இதயம் எனது உதிரம் உனது…

BGM

ஆண் : ஓ… கரை தாண்டியே வந்து புயல் போல மோது…
விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது…
இமை சாமரம் வீசி எனை அல்லும் போது…
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது…

{ குழு : சுனந்தா பறந்து வா வா…
உலகை மறந்து போய் விடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா…

BGM

குழு : சுனந்தா விரைந்து வா வா…
உருகி கரைந்து சாய்ந்திடலாம்…
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா… } * (2)

BGM


Notes : Anangae Sinungalama Song Lyrics in Tamil. This Song from Dev (2019). Song Lyrics penned by Thamarai. அணங்கே சினுங்கலாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading