ஒருநாள் மதீனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நூர்மதிதாசன்நாகூர் இ.எம்.ஹனிஃபாகே.எஸ்.ஜெய்சாஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Oru Naal Madeena Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…

ஆண் : பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்…
பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்…
பண்புடன் தோழர்கள் மத்தியிலே…

ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…

BGM

ஆண் : உதய நிலவின் குளிராக…
உலகில் தோன்றிய உம்மி நபி…
உதய நிலவின் குளிராக…
உலகில் தோன்றிய உம்மி நபி…

ஆண் : நீதி மறையின் திரு உருவாய்…
நிதமும் வாழ்ந்த தூதர் சொன்னார்…
இறுதி நாள் நெருங்கி வருகிறது…
இறைவன் அழைப்பும் தெரிகிறது…
கருணை இறைவன் சொல் கேட்டு…
கடமையை செய்ததில் குறையுள்ளதோ…

ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…

BGM

ஆண் : யாருக்கும் தவறுகள் செய்தேனோ…
எவருக்கும் துன்பம் தந்தேனோ…
யாருக்கும் தவறுகள் செய்தேனோ…
எவருக்கும் துன்பம் தந்தேனோ…

ஆண் : கூறுங்கள் அன்பு தோழர்களே…
குறைகள் இருந்தால் கூறுங்கள்…
எப்போதேனும் சிறு பிழைகள்…
என் வாழ்வில் ஏதும் செய்தேனோ…
தப்பாது இங்கே சொல்லிடுவீர்…
தயங்காமல் அதனை ஏற்றிடுவேன்…

ஆண் : ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…

BGM

ஆண் : அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்…
அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே…
அது கேட்ட தோழர்கள் நெஞ்சங்கள்…
அதிர்ந்தது அங்கமெல்லாம் நடுங்கியே…

ஆண் : நீதி தவறாத நாயகமே…
தாங்கள் நன்மையின்றி தீமை செய்ததில்லை…
அப்போது ஒருவர் எழுந்து நின்றார்…
அவர்தான் உகாஷா எனும் தோழர்…
ஒப்பில்லாத இறை தூதே…
ஓர் குறை எனக்கு உண்டு என்றார்…

BGM

ஆண் : சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்…
சினத்தால் துடித்து எழுந்தார்கள்…
சொன்னதும் ஸஹாபா பெருமக்கள்…
சினத்தால் துடித்து எழுந்தார்கள்…

ஆண் : அண்ணல் பெருமான் அமைதியுடன்…
ஆத்திரம் வேண்டாம் அமர்க என்றார்…
என்ன குறைகள் இருந்தாலும்…
இயம்புக அதனை நீக்கிடலாம்…
திண்ணமாய் அல்லாஹ் அறிந்திடுவான்…
தீமைகளின்றி காத்திடுவான்…

BGM

ஆண் : உத்தம நபியே இரஸூலே…
ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே…
உத்தம நபியே இரஸூலே…
ஒட்டகை மேல் தாங்கள் இருக்கையிலே…

ஆண் : சித்த மகிழ்வோடு நான் பிடித்து…
சீராய் மணலில் நடக்கையிலே…
சாட்டையை சுழற்றி ஒட்டகையை…
சட்டென தாங்கள் அடித்தீர்கள்…
ஒட்டி நடந்த என் உடம்பில்…
ஓரடி விழுந்தது அப்போது…

BGM

ஆண் : அதற்கு பதிலாய் தங்களை நான்…
அடித்திட அனுமதி வேண்டுகிறேன்…
அதற்கு பதிலாய் தங்களை நான்…
அடித்திட அனுமதி வேண்டுகிறேன்…

ஆண் : எதிலும் நீதி தவறாத…
இரஸூல் நபியதை ஏற்றார்கள்…
உண்மை உரைத்தீர் என் தோழரே…
உமது உள்ளம் சாந்தி பெற…
என்னை அடியும் என்றார்கள்…
இசைவாய் அங்கே நின்றார்கள்…

BGM

ஆண் : என்னை அடித்த சாட்டை இங்கே…
இல்லே தங்களின் வீட்டில் உண்டு…
என்னை அடித்த சாட்டை இங்கே…
இல்லே தங்களின் வீட்டில் உண்டு…

ஆண் : எண்ணம் நிறைவேற வேண்டுமதை…
ஏந்தலே எடுத்து வர சொல்லுங்கள்…
இனிய பிலாலே ஏகிடுவீர்…
எடுத்து வாரும் சாட்டை தனை…
கண்ணீரோடு பிலால் விரைந்தார்…
கருணை நபியின் இல்லத்துக்கே…

BGM

ஆண் : அங்கே அன்னை ஃபாதிமாவும்…
ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்…
அங்கே அன்னை ஃபாதிமாவும்…
ஆருயிர் மக்கள் ஹஸன் ஹூஸைனும்…

ஆண் : பாங்காய் மூவரும் வீட்டினிலே…
பண்பின் உரைவிடமாய் திகழ்ந்தார்…
பாச மிகுந்த அன்பர் பிலால்…
பரிவுடன் ஃபாதிமா எதிர் நின்று…
நேசம் தவழ்ந்திடும் சபைதனிலே…
நடந்ததை நயமுடன் எடுத்துரைத்தார்…

BGM

ஆண் : செய்தியை செவியில் கேட்டவுடன்…
சிந்தையில் வேதனை பொங்கியது…
செய்தியை செவியில் கேட்டவுடன்…
சிந்தையில் வேதனை பொங்கியது…

ஆண் : தூய என் தந்தை உடல் நலமில்லை…
தண்டனை எப்படி தாங்கிடுவார்…
ஏன்றே கூறி சாட்டை தனை…
ஏடுத்து பிலாலிடம் தரும் போது…
நன்றே சொல்லும் உகாஷாவிடம்…
நானே அடியை ஏற்றிடுவேன்…

BGM

ஆண் : அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்…
அழுது கண்ணீர் வடித்தார்கள்…
அருமை குழந்தைகள் ஹஸன் ஹூஸைனும்…
அழுது கண்ணீர் வடித்தார்கள்…

ஆண் : பெருமை நிறைந்த பாட்டனாருக்கு…
பதிலாய் எங்களை அடிக்கட்டுமே…
துயரம் மேலிட சாட்டைதனை…
துhpதமுடன் பிலால் எடுத்து சென்றார்…
பயமில்லாது உகாஷாவிடம்…
பெருமான் நபிகள் கொடுத்தார்கள்…

BGM

ஆண் : சாட்டையை கையில் வாங்கியதும்…
சாந்த நபியிடம் அவர் சொன்னார்…
சாட்டையை கையில் வாங்கியதும்…
சாந்த நபியிடம் அவர் சொன்னார்…

ஆண் : சட்டையில்லாது நான் இருந்தேன்…
செம்மலே தாங்கள் அடிக்கயிலே…
கேட்டதும் ஹாத்தமுன் நபியவர்கள்…
பணிவுடன் சட்டையை நீக்கியதும்…
சாட்டையை தூக்கி எறிந்து விட்டு…
தாவியனைத்தார் ஆவலுடன்…

BGM

ஆண் : நுபுவத்தொளிரும் நபி முதகில்…
நினைத்தது போல முத்தமிட்டார்…
நுபுவத்தொளிரும் நபி முதகில்…
நினைத்தது போல முத்தமிட்டார்…

ஆண் : உணர்ச்சி உள்ளம் குளிர்ந்திடவே…
உவகையில் மீண்டும் முத்தமிட்டார்…
சுற்றிலும் நின்ற ஸஹாபாக்கள்…
சோபனம் கூறி வாழ்த்தினரே…
மட்டில்லாத மகிழ்ச்சியிலே…
மஸ்ஜிதுந்நபவி திளைத்திடுமே…

BGM

குழு : ஸல்லல்லாஹூ அலா முஹம்மது…
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்…
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது…
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்…
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது…
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்…


Notes : Oru Naal Madeena Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs. Song Lyrics penned by Noormathidasan. ஒருநாள் மதீனா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top