ஒரு மந்தாரப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன ஜமீன்

Oru Mandharapoo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஆ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

ஆண் : மலையோரம் மாந்தோப்பு…
மாந்தோப்பில் பூங்காத்து…
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஆ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

—BGM—

பெண் : நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு…
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு…

ஆண் : நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா…
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா…

பெண் : உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போகுது…
ஆண் : ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது…

பெண் : உன்ன விட்டு அஞ்சு நிமிஷம்…
என்னால் வாழ ஆவாது…

ஆண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

பெண் : மலையோரம் மாந்தோப்பு…
மாந்தோப்பில் பூங்காத்து…
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்…

ஆண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

ஆண் : வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்…
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்…

பெண் : செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்…
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்…

ஆண் : ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பாக்கணும்…
பெண் : உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்…
ஆண் : நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

ஆண் : மலையோரம் மாந்தோப்பு…
மாந்தோப்பில் பூங்காத்து…
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்…

பெண் : ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா… ஓ…
ஆண் : அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…


Notes : Oru Mandharapoo Song Lyrics in Tamil. This Song from Chinna Jameen (1993). Song Lyrics penned by Vaali. ஒரு மந்தாரப்பூ பாடல் வரிகள்.


Scroll to Top