நான் யாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாசின்ன ஜமீன்

Naan Yaaru Enakkethum Song Lyrics in Tamil


ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

—BGM—

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

ஆண் : என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி…
யாரைத்தான் கேட்டானோ… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

—BGM—

ஆண் : ஓ… என்னப் பெத்து ராசையான்னு…
பேரு வச்ச ஆத்தாதான்…
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்…
போனாளம்மா காத்தாதான்…

ஆண் : என்னப் பெத்து ராசையான்னு…
பேரு வச்ச ஆத்தாதான்…
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்…
போனாளம்மா காத்தாதான்…

ஆண் : ஊரைச் சுத்தி நாள் முழுக்க…
ஓடும் ஆறு நானம்மா…
சின்னப் பிள்ள நான்தானுன்னு…
சொல்லும் இந்த ஊரம்மா…
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

—BGM—

ஆண் : ஓஓ… எந்த நாளும் எண்ணெய் கூட…
ஒட்டிடாது தண்ணீரு…
என்ன அந்த எண்ணெய் போல…
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு…

ஆண் : எந்த நாளும் எண்ணெய் கூட…
ஒட்டிடாது தண்ணீரு…
என்ன அந்த எண்ணெய் போல…
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு…

ஆண் : இங்கிருக்கும் பேர்களெல்லாம்…
என் மனசை பாக்கல…
என் கதையப் பாசமாக…
உன்னப் போலக் கேக்கல…
கேக்காவிட்டாக் குத்தம் என்னம்மா… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…

ஆண் : என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி…
யாரைத்தான் கேட்டானோ… ஹோய்…

ஆண் : நான் யாரு எனக்கேதும் தெரியலையே…
என்னை கேட்டா நான் சொல்ல வழியில்லையே…


Notes : Naan Yaaru Enakkethum Song Lyrics in Tamil. This Song from Chinna Jameen (1993). Song Lyrics penned by Vaali. நான் யாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading