நடு சாமத்தில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதிருமதி பழனிச்சாமி

Nadu Samathile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…

பெண் : நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது…
கட்டில் பாடம் ருசிக்குது…

ஆண் : இந்த மால மயக்கம்தான்…
அதிகால வரைக்கும்தான்…

பெண் : அன்பு கூட்டல் கணக்குதான்…
சொல்லிக்காட்டு எனக்குதான்…

ஆண் : முதன் முதலா வித விதமா சுகமோ… ஓஓஓ…

பெண் : நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…

—BGM—

பெண் : சின்ன இடை நீயும் தொட்டு…
சீண்டுவதில் நாணம் விட்டு…
நானொரு கிறக்குத்துல கதை படிக்குற நேரம்…

ஆண் : சித்திரம் போல் நீயும் மின்ன…
சில்மிஷம் நானும் பண்ண…
ஆனந்த குளத்தினிலே அலையடிக்கிற காலம்…

பெண் : உன்னை எண்ணி ஏங்கியிருந்தேன்…
உன்னிடத்தில் என்னை இழந்தேன்…

ஆண் : கண் இரண்டும் பூத்து கிடந்தேன்…
கட்டில் வரை காத்து கிடந்தேன்…

பெண் : வாலிபம் தவமிருந்த வேளை வந்ததய்யா…
ஆண் : இளமனசு இனி உனைத்தான் விடுமோ… ஓஓஓ…

ஆண் : நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…

பெண் : நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது…
கட்டில் பாடம் ருசிக்குது…

—BGM—

ஆண் : முன் கதவ தாப்பா போட…
மல்லிகைப்பூ வாசம் கூட…
மாப்பிள்ளை மனசுக்குள்ள மடை திறந்தது ஆசை…

பெண் : அங்க இங்க கிள்ள கிள்ள…
ஆசையில துள்ள துள்ள…
வீட்டுக்கு வெளியில் செல்லும் வள குலுங்கிடும் ஓசை…

ஆண் : என்ன செய்ய வேகம் வருது…
உன்னை அள்ள மோகம் வருது…

பெண் : வஞ்சிப்பொண்ணு வாழைக் குருத்து…
வித்தைகள கட்டுப் படுத்து…

ஆண் : போதையை கிளப்புதடி பூவே உன் வணப்பு…
பெண் : விரல் நுனிதான் உடல் முழுதும் படுமோ… ஓஓஓ…

ஆண் : நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…

பெண் : நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது…
கட்டில் பாடம் ருசிக்குது…

ஆண் : இந்த மால மயக்கம்தான்…
அதிகால வரைக்கும்தான்…

பெண் : அன்பு கூட்டல் கணக்குதான்…
சொல்லிக்காட்டு எனக்குதான்…

ஆண் : முதன் முதலா விதம் விதமா சுகமோ… ஓஓஓ…

ஆண் : நடு சாமத்திலே சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…

பெண் : நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பார்த்து ரசிக்குது…
கட்டில் பாடம் ருசிக்குது…


Notes : Nadu Samathile Song Lyrics in Tamil. This Song from Thirumathi Palanisamy (1992). Song Lyrics penned by Vaali. நடு சாமத்தில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading