| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| அகத்தியன் | ஹரிசரண் & சின்மயி | பிரேம்ஜி அமரன் | நெஞ்சத்தை கிள்ளாதே |
Oru Manasula Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு மனசுல இரு மனம் உரசுது…
இடையில் இருக்கிற காதலே நலமா…
வழி தெரியல எவரும் துணையில…
போகும் தூரம் தூரம்…
ஆண் : எது சரி என எவருக்கும் தெரியல…
இறைவனை படைச்சது காதலா மனிதா…
ஒரு முறை உன்னை தழுவினேன் விலகினாய்…
காதலே நீ வாழ்க…
ஆண் : சுவாசமே நீ என வாழ்ந்தவன் கேட்கிறேன்…
ஏனடி போகிறாய் யோசிக்காது சுவாசி…
ஆண் : ஒரு முறை பார்க்கலாம்…
நூறு நாள் வார்க்கலாம்…
போர்க்களம் தேவன்தான்…
பார்த்ததே நம் காதல்…
ஆண் : கோர்த்தாய் கையே சேர்த்த நெஞ்சே…
பார்த்து போ நீ பாதை எங்கும் நானே…
வேற்று நெஞ்சில் ஆசை கொண்டு…
போற்றுகின்ற வார்த்தை கூட நானே…
—BGM—
பெண் : இரு மனசுல உரசுன மனசுல…
எது எது இருக்குது இறைவனே அறிவான்…
வழி நெடுகிலும் உயிருடன் அழுதது…
காதலாலே காயம்…
பெண் : தவி தவிக்குற காதலும் நலமுற…
ஒரு முறை அதனை அனுப்பினேன் தழுவ…
அதை எடுத்து நீ உயிருடன் புதைத்தாய்…
மோசமாச்சு நேசம்…
பெண் : ஒரு முறை பூத்தது மீண்டுமே பூக்காலம்…
வேரிலே நீரினாய் காய்ந்து போச்சு காதல்…
பெண் : காலையில் வளர்கிறாய்…
மாலையில் தேய்கிறாய்…
நீ நிழல் என்பதால் காதல் போச்சு தூரம்…
பெண் : வானம் பார்க்க நானும் பார்த்தேன்…
காதல் நீரே நீரை தூவி போச்சு…
நீயும் பார்க்க நானும் பார்த்தேன்…
காதல் தீவில் சோகம் கண்ணில் ஆச்சு…
—BGM—
ஆண் : காலையும் மாலையும் நீயென நினைக்கிறேன்…
நண்பகல் போலவே மாறலாமோ நீதான்…
பெண் : வீணையை மீட்டினேன் விரல்களை அறுத்ததே…
இசையில்லா கம்பியாய் இருந்ததே உன் காதல்…
ஆண் : உன் பேரை தவிர வேறு வார்த்தை…
ஹேஹே… பேச மாட்டேன் சாகும் போது அன்பே…
பெண் : நூறு நூறு பேர்கள் உண்டே…
எந்தன் பேரை யாரை சொல்வாய் இங்கே…
ஆண் : காதல் அறியும் உந்தன் வாசம்…
தேடி தேடி வந்து சேரும் அங்கே…
பெண் : காலம் அறிதே காதல் போயின்…
காதல் காதல் பாவம் காதல் இங்கே…
Notes : Oru Manasula Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. ஒரு மனசுல பாடல் வரிகள்.
