முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்யுவன் ஷங்கர் ராஜாவின்னர்

Mudhal Murai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

பெண் : முதல் முதல் வந்த மழை எது என்று…
நதியிடம் கேட்டால் என்ன சொல்லும்… ஹே ஏய்ய்…
முதல் முதல் சேர்ந்த நதி எது என்று…
கடலிடம் கேட்டால் என்ன செய்யும்…

—BGM—

ஆண் : ஏனோ என் மனம் அது…
எங்கோ பறந்தது பெண்ணே…
உன் வீட்டுக்கு வந்ததா…

பெண் : ஹேஹே… இல்லை என் மனம் அது…
வாசல் அருகினில் நின்று…
யாரும் வரவில்லை என்றதே…

ஆண் : நெடுஞ்சாலையோரம் உள்ள பெண்கள் எல்லாம்…
நீதானோ என்று மனம் குழம்பி போகுதே… ஹோ…

பெண் : உன் மனதை அழைத்து வந்திட…
என் மனதை அனுப்பி வைக்கிறேன்…
ரெண்டும் ஒன்று சேர்ந்து தொலையாதோ… ஓ…

ஆண் : முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹேஹேஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

—BGM—

பெண் : ஓஹோ… இது என்ன என்னில் மெல்ல நுழைவது…
போ போ என்று சொல்லவில்லை நான்…

ஆண் : ஓஹோ… தேநீர் பருகிடும் அந்த கோப்பை…
அதிலடி பெண்ணே உன் முக தரிசனம்தான்…

பெண் : ஒரு கோடி பூக்கள் அது ஒன்றாய் சேர்ந்து…
என் மேலே சிந்தும் ஒரு மாயமானதே… ஓஹோ…

ஆண் : கவிதைகள் தோன்றும் இடம் எது…
கவிஞர்கள் அறிவதில்லை…
அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்…

பெண் : ஹேய்… முதல் முறை இந்த உலகத்திலே…
பூ பூத்த பூ எது சொல்வாயா…
காற்றோடு கேட்டேன் இதையே…

பெண் : ஹே… முதல் முறை இந்த மலருக்குள்ளே…
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா…
பூவோடு கேட்டேன் இதையே…

—BGM—


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Winner (2003). Song Lyrics penned by Pa. Vijay. முதல்முறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading