ஒரு மாலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜாவேத் அலி & ஷில்பா ராவ்யுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Oru Maalai Neram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…

பெண் : வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு…
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு…

ஆண் : இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று…
எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே…

ஆண் : கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்…
சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க…

—BGM—

ஆண் : ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…

—BGM—

பெண் : தினம் உனை பார்க்கும்போது…
இடையினில் தோன்றும் அந்த…
ஊடலாம் அன்பே ஐய்யோ அது அழகானது…

ஆண் : ஓ… தனிமையில் நீயும் நானும்…
கண்களாலே பேசும்போது…
எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது…

பெண் : அச்சமா நானமா அன்பிலே கொல்வதா…
உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலயே…

ஆண் : ஹேய்… எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…
எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…

—BGM—

ஆண் : எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…

—BGM—

ஆண் : ஓ… மழை வரும் நேரம் முன்பு…
தரை வரும் காற்றைப் போல…
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே ஜில்லென்று நீ…

பெண் : தூவும் மழை நின்ற பின்பு…
தூரல் தரும் மரங்கள் போல…
நினைவுகள் தந்தே செல்வாய் என்றென்றும் நீ…

ஆண் : ஓ… கண்களா கன்னமா பார்வையா வார்த்தையா…
உன்னிடம் பிடித்தது எதுவோ தெரியலயே…

பெண் : எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…
எப்போது பூக்கள் பூக்கும் புரியாதது…
எப்போது காதல் தாக்கும் தெரியாதது…

—BGM—

ஆண் : ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…


Notes : Oru Maalai Neram Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Na Muthukumar. ஒரு மாலை நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading