ஊர் ஊரா போகும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்சந்தியாஇளையராஜாகாக்கைச் சிறகினிலே

Oor Oora Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

—BGM—

பெண் : ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு…
வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு…
காரணம் கேளு அது பாடுது பேரு…
தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு…

பெண் : உன்னுடன் தானா இல்லை…
நான் மட்டும் தானா…
வேதம் கேட்கும் காதுக்குள்ளே…
ஏழை நாதம் கேட்காதா…

பெண் : மாதம் தேதி நாட்கள் எல்லாம்…
இன்று நியாயம் கூறாதா…
காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே…
அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

—BGM—

பெண் : தோளில் கருகாமணி விம்மி ஆடுது…
தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது…

பெண் : நான் படும் பாடு அதை யார் அறிவாரோ…
நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது…
நீ போகும் பாதை அதுதான் தேடுது…
நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா…

பெண் : காப்புக் கட்டி கரகம் ஆட…
அம்மன் அருளைத் தருவாளா…
சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே…
காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…


Notes : Oor Oora Song Lyrics in Tamil. This Song from Kakkai Siraginilae (2000). Song Lyrics penned by R. V. Udayakumar. ஊர் ஊரா போகும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading