ஊர் ஊரா போகுற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்எஸ்.பி.பாலசுப்ரமணியம்தேவாசொக்கத்தங்கம்

Oor Oora Pogura Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…

ஆண் : போன தெச புரியலையே…
பொசுங்குதடி எம் மனசு…
புங்கமரக் கிளை தொங்க…
தூண்டுதடி என் உசுரு…
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி…

ஆண் : ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…

—BGM—

ஆண் : பட்டா போட்டு என்னைத்தானே பதிவாக்கி வச்சாளே…
பாதியிலே வீதி நிறுத்தவா…
சிக்கிமுக்கி கண்ணால்தானே தீயை பற்ற வச்சாளே…
தீயில் என்னை வாட்டி எடுக்கவா…

ஆண் : அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்…
நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்…
அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்…
சிறுக சிறுக சாகுறேனே…
கண்ணம்மா மனம் கல்லாம்மா பதில் நீ கூறம்மா…

—BGM—

ஆண் : செக்கிழுக்கும் மாட்டைப் போல…
என்னைச் சுத்தி வந்தாயே…
செக்கில் என்னை ஆட்டி பார்ப்பதேன்…

ஆண் : ஈ எறும்ப கொன்னா கூட பாவமுன்னு சொன்னாயே…
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்…

ஆண் : என் நெஞ்சுல வாளை வீசியிருந்தா…
வீர மரணம் கெடைச்சிருக்கும்…
என் முதுகுல வாளை வீசியதால்…
மானம் இழந்து சாகுறேனே…
தாயம்மா இந்த காயம்தான் இனி ஆறாதம்மா…

—BGM—

ஆண் : ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…

ஆண் : போன தெச புரியலையே…
பொசுங்குதடி எம் மனசு…
புங்கமரக் கிளை தொங்க…
தூண்டுதடி என் உசுரு…
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி…

—BGM—


Notes : Oor Oora Pogura Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Snehan. ஊர் ஊரா போகுற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading