கல்யாணம் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Kalyanam Enbathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கார்யேசுதாசி… கரனேசு மந்திரி…
போஜேசு மாதா… சயனேசு ரம்பா…

ஆண் : கல்யாணம் என்பது பூர்வ பந்தம்…
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்…
சம்சாரம் என்பது ஆதி அந்தம்…
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்…

ஆண் : எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே…
ஆயிரம் காலமே வாழுமே…

—BGM—

ஆண் : வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்…
வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்…
விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்…
தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்…
இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்…

ஆண் : நீ ஏது நான் ஏது இங்கே…
நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா…

ஆண் : கல்யாணம் என்பது பூர்வ பந்தம்…
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்…

—BGM—

ஆண் : தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்…
தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்…
தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்…
தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்…

ஆண் : பெண்ணின் பெருமை சொல்லவா…
கடல் போன்றதல்லவா…
நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்…
அதற்கொரு உவமை தான் பெண்மையே…

ஆண் : கார்யேசுதாசி… கரனேசு மந்திரி…
போஜேசு மாதா… சயனேசு ரம்பா…


Notes : Kalyanam Enbathu Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. கல்யாணம் என்பது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading